முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

சுதந்திர நாள் விழாவில் விருது பெற்றோரின் விவரம்!

சுதந்திர நாள் விழாவில் பல்வேறு விருதுகளை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் வழங்கியது குறித்து...

News image

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதை பெற்றுக்கொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிரிவாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரியங்கா ஆகியோர். - டிஎன்எஸ்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:39 pm IST

சுதந்திர நாள் விழாவில் பல்வேறு விருதுகளை தமிழக முதல்வா் சி.ஜோசர் விஜய் சனிக்கிழமை வழங்கினாா்.

நாட்டின் 80 ஆவது சுதந்திர நாளையொட்டி, சென்னை புனிதா ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தேசிய கொடி ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழக அரசின் விருதுகளை வழங்கினார்.

தகைசால் தமிழர் விருது: 2026 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் வழங்கினார்.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது: பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாகச் செயல்பட்ட 6-வது மற்றும் 2-வது மண்டலங்களுக்கும், கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் மாநிகராட்சிகளுக்கும், போடிநாயக்கனூர், ஆரணி மற்றும் விழுப்புரம் நகராட்சிகளுக்கும், திருவிடைமருதூர், குருங்கல், செட்டிப்பாளையம் பேரூராட்சிகளுக்கும் வழங்கப்பட்ட சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிரிவாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார்.

அறிவியல் தொழில்நுட்பத்துக்கான அப்துல் கலாம் விருது: சர்க்கரை நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. விருதுக்கான 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.5 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை, அவரது சார்பில் அவரது மகள் பெற்றுக்கொண்டார்.

சர்க்கரை நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் அவரது மகள் பெற்றுக்கொண்டார்.

சர்க்கரை நோயியல் துறையின் சிறப்பு நிபுணர் மருத்துவர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் அவரது மகள் பெற்றுக்கொண்டார். - டிஎன்எஸ்

முதல்வரின் நல் ஆளுமை விருது: நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு நல் ஆளுமை விருது அளிக்கப்பட்டது.

 கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. - டிஎன்எஸ்

கல்பனா சாவ்லா விருது: கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துவுக்கு வழங்கப்பட்டது.

மாநில இளைஞருக்கான விருது: இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிர்வேலுக்கு வழங்கப்பட்டது.

மாநில இளைஞா் பெண்கள் பிரிவுக்கான விருது: ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மருத்துவருக்கான விருது: கே.கே.நகர் அரசு மருத்துவமனை மருத்துவர் திருநாவுக்கரச்சுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது: கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நிறுவனத்துக்கான விருது: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த சமூகப் பணியாளுக்கான விருது: திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு வழங்கப்பட்டது.

அதிகயளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்துக்கான விருது: திருப்பூர் எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.