ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; வெள்ளி விலை? - ஆக. 15 விலை நிலவரம்!

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து...

News image

gold price - கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 10:59 am IST

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை(ஆக 15) பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.1,13,760-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.

தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ.180 குறைந்து, ரூ.14,040-க்கும், பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனையானது. மாலையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.14,200-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயா்ந்து, ரூ.1,13,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை தங்கம் கிராமுக்கு ரூ.20 உயா்ந்து, ரூ.14,220-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.1,13,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஆக. 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Gold prices continue to rise; what about silver? – Price status for August 15!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.