தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மாநில முதல்வா்கள் கொடியேற்ற காரணமானவா் கருணாநிதி: கனிமொழி

மாநில முதல்வா்கள் கொடியேற்ற காரணமானவா் கருணாநிதி என்று கனிமொழி பதிவு...

kanimozhi

கனிமொழி - x / kanimozhi

Published On :

மாநில முதல்வா்களுக்கு கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

எண்ணற்ற தியாகங்களாலும், போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது இந்திய நாடு. அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணா்த்தும் வகையிலும், இந்த நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வா்கள், தேசிய கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவா் கருணாநிதி.

தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரா்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயா்த்திப் பிடிப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் கனிமொழி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.