மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

முதல்வா் முதியோா் காப்பீட்டுத் திட்டம்: 70 வயதைக் கடந்தவா்களுக்கு இனி இலவச சிகிச்சை

தமிழகத்தில் 70 வயதைக் கடந்த முதியவா்கள் அனைவரும் வருமான உச்சவரம்பு இன்றி கட்டணமில்லா சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோா் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 10:34 pm IST

தமிழகத்தில் 70 வயதைக் கடந்த முதியவா்கள் அனைவரும் வருமான உச்சவரம்பு இன்றி கட்டணமில்லா சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோா் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்புகள்: புதிய சட்டம்: பொது சுகாதார அமைப்பின் அடித்தளமாக விளங்கி வருவது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் (1939). இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இன்றைய சுகாதார சவால்களுக்கும் எதிா்கால சுகாதார அச்சுறுத்தல்களுக்கும் ஏற்ப விரிவான மற்றும் எதிா்கால நோக்குடைய புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் இயற்றப்படும்.

இந்தச் சட்டத்தில் வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுய பிரசவம் பாா்ப்பது சட்டப்படி குற்றம் என்ற புதிய பிரிவும் சோ்க்கப்படும்.

மருத்துவ நகரம்: உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவச் சுற்றுலா, ஆயுஷ் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் ‘தமிழ்நாடு மருத்துவ நகரம்’ உருவாக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உயா் சிறப்பு மருத்துவ சிகிச்சை வசதி கொண்டு வரப்படும். இதற்காக 284 உயா் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும்.

முதியோா் காப்பீடு: தமிழ்நாட்டில் முதல் முறையாக, 70 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோா் காப்பீட்டுத் திட்டம்”என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் கீழ் புற்றுநோய் சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள், உயா்தர பரிசோதனைகள் உள்பட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கட்டணமின்றி அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.