மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை!

தமிழ்நாட்டில் அரசுப் பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பெண் பணியாளர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் 365 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பேரவையில் இன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் பேசுகையில், தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பெண் பணியாளர்களுக்கும் மூன்றாவது குழந்தைக்கும் 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுவரை, அரசு ஊழியர்களுக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மட்டும் 365 நாள்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய சலுகையாக 3வது குழந்தைக்கும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், அவையில் உறுப்பினர்கள் கூறிய விவரங்களை நான் குறிப்பெடுத்துக் கொண்டேன், அவற்றை பரிசீலித்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி செயல்படுத்துவேன் என்றும் உறுதிமொழி அளித்தார்.

அவர் முதலில், முதல்வர் விஜய் குறித்து புகழ்பேசத் தொடங்கினார். அது நிற்காமல் சென்று கொண்டேயிருந்தபோது, இடையே, அவைத் தலைவரே, அச்சப்பட வேண்டாம், 15 நிமிடங்களுக்குள் என்னுடைய பதிலுரையை முடித்துவிடுவேன் என்று சொல்லி அங்கிருந்த உறுப்பினர்களுக்கு சற்று மன ஆறுதலைக் கொடுத்தார்.

அவர் அவைத் தலைவரே, அச்சப்பட வேண்டாம் என்று சொன்ன போது, அங்கிருந்த தவெக எம்எல்ஏக்களே சிரித்துவிட்டார்கள். காரணம், அவர்களும், சரத்குமார் கையில் வைத்திருக்கும் தாள்கள் எவ்வளவு இருக்கிறது என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

A new benefit regarding maternity leave has been announced for female government employees in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.