தவெக அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது; ஆனால், அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இன்னும் நிருவப்படவில்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம் மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித் துறை), மனிதவள மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசுகையில், “தந்தை பெரியாரை கொள்கைத் தலைவர் என்கிறீர்கள். தவெக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது என்பதனை அரசின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, ”நாங்கள் பெரியார் கொள்கையைப் பின்பற்றுவதாக தம்பட்டம் அடிப்பதாகப் பேசினார். எங்கள் அலுவலகத்தில் பெரியார் சிலை உள்ளது, இன்னும் அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை நிருவப்படவில்லை” என்றார்.
Summary
Minister Aadav Arjuna stated in the Legislative Assembly that while there is a statue of Periyar at the TVK office, a statue of Periyar has not yet been installed at Anna Arivalayam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்யின் அலுவலக அறை டெண்டரில் முறைகேடா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்!

விளையாட்டின் தலைநகராக தமிழ்நாடு வரவேண்டும்: ஆதவ் அர்ஜுனா
இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!




