FOLLOW US

ON GOOGLE DISCOVER

இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் ஏழைகளா? ஆடம்பரத்துக்கு மக்கள் பணமா? நடிகை கஸ்தூரி கண்டனம்!

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் அறிவிப்புக்கு கஸ்தூரி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

News image

முதல்வர் விஜய்யின் | நடிகை கஸ்தூரி - x

Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:09 pm IST

தமிழ்நாடு எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பேசிய விசிக எம்.எல்.ஏ. ஜோதிமணி, தன்னிடம் வாகன வசதி இல்லை, உதவியாளரை நியமிக்க பணம் இல்லை, இவற்றை நிறைவேற்றினால் மக்களை எளிதில் சந்திக்க முடியும் எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஜோசப் விஜய், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்றும், வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ. 25,000 உதவியாளர்படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

”ஓட்டுநருடன் கூடிய கார்கள், மாதம் ரூ. 75,000 ஓட்டுநர்படி மற்றும் ரூ. 25,000 உதவியாளர்படி ஆகியவற்றை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற 'மிகவும் ஏழை' உறுப்பினர்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தர நமது வரிப்பணம் வீணடிக்கப்படப் போகிறதா?

நினைவில் கொள்ளுங்கள், இந்த ஏழை மனிதர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 1,05,000, சட்டப்பேரவை வரும் நாள்களுக்கு ரூ. 500-ம் பெறுகிறார்கள்!

என்ன அபத்தம் இது? பெரும்பான்மையான மக்களைப் போலவே சட்டப்பேரவை உறுப்பினர்களும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும், சாமானிய மனிதனைப் போல நடந்து செல்லட்டும். இந்த '5-ஸ்டார்' பாணி நிர்வாகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

மேயர்களும் நகராட்சி அதிகாரிகளும் ஏற்கனவே இதைப் பெறுகிறார்கள் என்பதால் அவர்களுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, அந்தத் தேவையற்ற செலவுகளை வெட்டிச் சுருக்க வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன்!

ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் தலையிலும் கடன் சுமையாக ரூ. 2 லட்சம் உள்ளது.

பலர் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஆனால், முதலில் இதைத் தெரிந்துகொள்ளுங்கள். என்னிடம் உள்ளவற்றில் ஒரு பைசாகூட பொது மக்களின் பணம் கிடையாது. என்னிடம் கார் இல்லை.

நான் பெரும்பாலும் மெட்ரோ ரயில், ஆட்டோ மற்றும் பேருந்து பயணங்களையே மேற்கொள்கிறேன். அப்படித்தான் மக்களை ஊக்குவிக்க வேண்டும். அப்படித்தான் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

உண்மையான சமூக சேவகர்களும் நேர்மையான பத்திரிகையாளர்களும் இந்த சட்டப்பேரவை உறுப்பினர்களைவிட மிக அதிகமாக, சுயநலமின்றி உழைக்கிறார்கள். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு ஆடம்பரம் வேண்டுமா?

தொழிலதிபர்கள் அம்பானி அல்லது அதானியின் ஓட்டுநருக்குக் கூட அதிகபட்சம் ரூ. 30,000 தான் சம்பளம் இருக்கும். அப்படியிருக்கையில், இந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாதம் ரூ. ஒரு லட்சம் சம்பளம், காருடன் ரூ. ஒரு லட்சம் படி, கூடுதல் ஊக்கத்தொகை போன்றவற்றை பெறுவது ஏன்?

இதுமட்டுமின்று, அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதில்லை, இலவச தங்குமிடம் மற்றும் இலவச ரயில் பயண வசதிகளுக்கும் தகுதியுடையவர்கள்.

முதல்வர் விஜய், அதிர்ச்சியளிக்கும் இந்தச் செலவுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Are Leema Rose, Udhayanidhi, and Aadhav poor? Is public money being spent on luxury? Actress Kasthuri condemns it!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.