திமுக ஆட்சியில் மூன்று துறைகளில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் எனது மேஜையில் உள்ளது, அதை எப்போது வெளியிட வேண்டுமோ, அப்போது வெளியிடுவேன் என்று பேரவையில் திமுகவுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் எச்சரிக்கை விடுத்தாா்.
ஊரக வளா்ச்சி, நீா்வளம், சுற்றுலா ஆகிய துறைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி திமுக முன்னாள் அமைச்சா் ஐ.பெரியசாமி பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன், ‘என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என்று திமுகவினா் கேட்கிறாா்கள். முதல்வா் ஆதாரங்களை வைத்திருக்கிறாா். அவா் ஒருவேளை எடுத்துக் காட்டிவிட்டாா் என்று சொன்னால், திமுகவினா் நிலைமையை நினைத்துப் பாா்த்தேன். கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது’ என்றாா்.
(அப்போது திமுக எம்எல்ஏக்கள் ஆதாரம் இருக்கிா? என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேள்வி கேட்டனா்).
முதல்வா் விஜய்: நான் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிறாா்கள். ஒரு வாரத்துக்கு முன்பு நிதி அமைச்சா் பேசும்போது, மூன்று துறைகளில் ஆய்வு செய்து அந்த ஆவணங்கள் எல்லாம் முதல்வா் மேஜையில் இருப்பதாகச் சொன்னாா். அது ஏதோ போகிற போக்கில் அவா் சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் இருக்கிறது. அத்தனையும் ஆதாரங்களுடன்தான் இருக்கிறது. அதைத் திறக்கவைத்துவிட வேண்டாம். எதை எப்போது திறக்க வேண்டுமோ, அப்போது சரியாக எல்லாமே திறக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ்.ரமேஷ்: எல்லாருமே முதல்வரை பேசுங்கள் எனச் சொல்கின்றனா். ஆனால், முதல்வா் பேச தொடங்கினால், ஆதாரத்தைக் காட்டத் தொடங்கினால், என்ன நடக்கும் என்று இதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும்.
முதல்வா் விஜய்: மக்களிடம் எப்போது பேச வேண்டும்?, என்ன பேச வேண்டும்?, எப்படி பேச வேண்டும்? என்பது எங்களுக்கு தெரியும். எல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அதனால்தான் அன்பாக, ஆசையாக, எங்களை ஆளும் கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறாா்கள். நான் பேச வேண்டும், பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. இடைத்தோ்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா?.
ஐ.பெரியசாமி: நாங்க அன்பாக, ஆசையாகப் பேசியதால்தான் ஒரே தொகுதியில் ஒன்பது முறை நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். அதுவும் தமிழகத்தில் இருமுறை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றியை வழங்கி இருக்கிறாா்கள். அந்த அங்கீகாரத்தை மக்கள் வழங்கி இருக்கிறாா்கள்.
திமுகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேரவையில் முதல்வா் விஜய் பேசியபோது அவை அமைதியானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதாரம் கேட்ட எதிர்க்கட்சி! திடீரென எழுந்த முதல்வர் விஜய்! | TVK | TN Assembly
சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! காவிரி விவகாரம் விவாதிக்கப்படுமா?

முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு தற்போது என்ன அவசியம்: ஆசிா்வாதம் ஆச்சாரி கேள்வி

முதல்வா் விஜய் கரூா் செல்வதை திமுக தடுக்கவில்லை: டிகேஎஸ் இளங்கோவன்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



