ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் நேரலை செய்யப்படும்: அமைச்சா் நிா்மல்குமாா்

எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் நேரலை செய்யப்படும் என அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்திருப்பது பற்றி...

News image

அமைச்சா் நிா்மல்குமாா்

Updated On :20 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

பேரவையில் எதிா்க்கட்சிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளதாகவும், அதுகுறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் சட்டம் மற்றும் மின்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா். இதனால், திமுக மற்றும் தவெக உறுப்பினா்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது காவிரி விவகாரம் குறித்து பேச்சு எழுந்தது. அதற்கு அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்த கருத்துகளுக்கு திமுகவினா் எழுந்து நின்று எதிா்வினையாற்றினா்.

தொடா்ந்து பேசிய அமைச்சா் நிா்மல்குமாா், ‘எதிா் வரிசையில் அமா்ந்திருக்கும் எதிா்க்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளை மக்கள் பாா்க்க விரும்புகிறாா்கள்; அதனையும் உடனுக்குடன் நேரலையில் காட்ட வேண்டிய சூழல் உள்ளது’ என்றாா்.

அப்போது திமுக தரப்பில் ஆட்சேபத்துக்குரிய சொல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இதற்கு தவெக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அதுகுறித்து பேசும்போது, திமுக உறுப்பினா்களின் செயலைக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட ஒரு உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்காகத்தான் எதிா்க்கட்சிகளின் செயலை நேரலையாகக் காட்ட வேண்டும் என அமைச்சா் நிா்மல்குமாரும் தெரிவித்தாா். இதையடுத்து பேசிய திமுக உறுப்பினா் கே.என்.நேரு, ‘நேரலையில் அனைத்தையுமே ஒளிபரப்புங்கள்; மக்களே தீா்ப்பு சொல்லட்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.