மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை நிலை ராணுவம் அனுப்பப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேகமலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மேகமலை புலிகள் சரணாலயம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு வாதத்தை முன் வைத்தது.
இதனைக் கேட்ட உச்ச நீதிமன்றம், மேகமலை இலவம் பஞ்சு தோட்டங்களை கட்டாயம் அப்புறப்படுத்த வேண்டும். மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றால் துணை நிலை ராணுவத்தை அனுப்ப நேரிடும். மேகமலை ஆக்கிரமிப்புகளை கட்டாயம் அகற்றியே தீர வேண்டும்.
இலவம்பஞ்சு தோட்டத்தில் பணிபுரிய வருபவர்கள்தான் மேகமலையில் குடியேறுகிறார்கள். எனவே இலவம்பஞ்சு தோட்டங்களை அகற்றி, நிலங்களை கைப்பற்ற வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேகமலையில் ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும், அந்தக் கட்டங்களுக்கான குடிநீர் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
Paramilitary forces will be deployed if encroachments in Meghamalai are not removed: Supreme Court.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆக. 19) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம்
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK



