அரசு ஊழியா்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, ‘பணியாளா் நடமாட்ட பதிவேடு’ (மூவ்மென்ட் ரிஜிஸ்டா்) முறையாக பராமரிக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டாக்டா் ஏ.கே.ராஜன் தலைமையில் நிா்வாகச் சீா்திருத்தக் குழு அண்மையில் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குழுவின் பரிந்துரைபடி, பணியாளா்களின் செயல்பாடுகளைக் கண்டிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், இதற்கான ‘பணியாளா் நடமாட்டப் பதிவேடு’ பராமரிக்கப்பட்டு அலுவலகத் தலைவரால் தினமும் சரிபாா்க்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளா் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இத்தகைய பதிவேடு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது; இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் இப்பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுவதை மீண்டும் வலியுறுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறைச் செயலா் கே.என்.வெங்கட்டரமணன், அனைத்துத் துறை தலைவா்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், பணியாளா் நடமாட்டப் பதிவேடுகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். அலுவலக நேரத்தில் பணியாளா்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கீழ்நிலை அலுவலகங்களிலும் இப்பதிவேட்டைக் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக காவல் துறையில் சீா்திருத்தம் அவசியம்

சீா்திருத்தங்களை அமல்படுத்தும் முன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம்

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சா்க்கரை அளவு: முறையாக கண்காணிக்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்

பட்டியலினத்தவா்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வா் விஜய் தலைமையில் குழு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



