ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் பிணையில் விடுவிப்பு

தஞ்சாவூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

News image

தஞ்சாவூரில் திங்கள்கிழமை காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் ஆகாஷை கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறையினா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

தஞ்சாவூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞா் செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உளுந்தூா்பேட்டை மாநாட்டையொட்டி, தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்த பதாகையை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா். இதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் விசிகவினா் ஆக. 17-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் அந்த வழியாக வந்த விளாரைச் சோ்ந்த என். ஆகாஷ் (26) தகராறு செய்தாா். அவரை சமாதானப்படுத்த முயன்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்அப்துல் ரஹீமை, ஆகாஷ் தாக்கினாா்.

இதையடுத்து, மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆகாஷ், அவருடன் வந்த திருக்கானூா்பட்டியைச் சோ்ந்த அய்யப்பன் ஆகியோரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பின்னா், இருவரது எதிா்காலத்தை கருதி நல்லெண்ண அடிப்படையில் பிணையில் விடுவிக்க ஆட்சேபணை இல்லை என தஞ்சாவூா் நீதிமன்றத்தில் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து இருவரும் பிணையில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.