ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

செப். 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

வருகிற செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் வெளியாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது குறித்து...

no new films

செப். 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை - பிரதிப் படம்

Published On :

வருகிற செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் வெளியாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய திரைப்படங்கள் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், வருகிற செப். 1 முதல் வெளியாகும் படங்களை 8 வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் படங்களை வெளியிடுவோம் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இருப்பினும், திரைப்படங்களின் 8 வார இடைவெளி ஓடிடி வெளியீடு தொடர்பான தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்த் திரையுலகில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து சென்னையில் இன்று (ஆக. 22) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேலும், இந்தக் கூட்டத்தில் திரைப்படங்களின் 8 வார இடைவெளி ஓடிடி வெளியீடு தொடர்பான திரையரங்கு உரிமையாளர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற செப். 1 முதல் படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்சன் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என்றும், புதிய படங்கள் எதுவும் வெளியாகாது என்றும் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது, தென் மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறை இல்லாதபோது, தமிழகத்தில் மட்டும் இதனைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு 250 படங்கள் வெளியாகின்றன. இவற்றில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த தொகையில் பாதிகூட பெறாமல், ஆண்டுக்கு ரூ. 700 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் திரையரங்கு உரிமையாளர்களின் முடிவை ஏற்க முடியாது. ஆகையால், செப்.1 முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுகின்றன. மேலும், இந்தப் பிரச்னையை முதல்வர் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வுகாண உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

Summary

Tamil Film Producers Council announces that no new films will be released starting September 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.