
தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம்
தையூர் கொலை வழக்கில் கைதான இருவர் தவெகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி..
கோப்புப்படம்
தையூர் கொலை வழக்கில் கைதான இருவர் தவெகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்போரூர் ஒன்றியம். தையூர் ஊராட்சியை சேர்ந்த சி.ஏழுமலை மற்றும் அவரது மகன் ஏ.கௌதம் ஆகிய இருவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை. TVK Family இணையதளத்தின் மூலம் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ளார்கள்.
தற்போது இவர்கள் இருவரும் சட்டத்திற்குப் புறம்பாகவும், கட்சியின் விதிமுறைகளை மீறியும் செயல்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற உரிமையிலிருந்து அதிகாரப்பூர்வமாக அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவிந்துக் கொள்கிறேன்.
மேலும், அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளின்படி மாநில, மாவட்ட நகரம், பேரரூராட்சி, ஒன்றியம், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் அனைவிரும் இனிமேல் இவர்களை அமைப்பின் பெயரால் எந்தவிதமான தொடர்பையும் அல்லது அமைப்பு சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் கூலிப்படையால் வெட்டப்பட்ட பிரவீன் குமார் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த வழக்கில் ஏழுமலை, அவரது மகன் கௌதம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Summary
Two people arrested in the Thaiyur murder case have been abruptly expelled from the TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





