பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

விராலிமலை அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான மாணவன்!

மேப்பூதகுடியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவன் பலியானது பற்றி....

Pudukkottai: Student dies due to official negligence!

மாணவன் மகதீப்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:10 pm IST

மேப்பூதகுடியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த சில மாதங்களாக இந்த பிரச்னை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் குழாய் சரி செய்யப்படாததால் தொடர்ந்து குழாயிலிருந்து வெளியேறும் நீர் அருகே உள்ள திறந்த வெளி இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதில் காளப்பனூரைச் சேர்ந்த முத்தழகு என்பவரது மகன் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மகதீப் (11) இறங்கி குளித்துள்ளான். சற்று ஆழமான பகுதிக்கு சென்றபோது சகதிக்குள் கால் சிக்கி நீரில் மூழ்கி மூச்சு திணறி பலியானான்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மாணவன் உயிர் பறிபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Summary

The tragic incident in Mae-Poodhagudi, where a student lost his life due to official negligence, has caused deep grief.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.