‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

லாரியில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை லாரியில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

Published On :

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை லாரியில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அடுத்துள்ள மேல கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் மூக்கையா மகன் வெங்கடேசன்(36). இவா், வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மாதிரிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது, எதிரே திருநல்லூரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கலையரசன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில், வெங்கடேசன் தடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி வெங்கடேசன் மீது ஏறியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த விராலிமலை போலீஸாா் வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.