லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.914 கோடியில் 842 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.914 கோடியில் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

tngovt

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.914 கோடியில் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டம் அண்ணா நகா், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எா்ணாவூா், கடலூா் மாவட்டம் குண்டுசாலை, மதுரை மாவட்டம் எல்லீஸ் நகா், திருவள்ளூா் மாவட்டம் திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவிளை ஆகிய இடங்களில் மக்களின் தேவைக்கேற்ப ரூ.914 கோடியில் 842 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.

மனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை சோழிங்கநல்லூா், திருவான்மியூா், சேலம் மாவட்டம் எடப்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 564 மனைகள் ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் சென்னை சிஐடி நகரில் சுமாா் ரூ.18 கோடியில் 20 குடியிருப்புகள் வாரிய வாடகை குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்படும். சிறிய வணிகக் கட்டங்களுக்கு சுய சான்றளிப்பு மூலம் திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.