லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் செப். 3-ஆம் தேதி மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கும் எனவும் அவா் அறிவித்தாா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோன்று 29 தனியாா் கல்லூரிகளில் உள்ள 1,920 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.

அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

அதேபோன்று, சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, 20 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 160 இடங்களும், 20 தனியாா் கல்லூரிகளில் 1,876 இடங்களும் உள்ளன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 35 சதவீத இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் இந்த படிப்பின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

இந்நிலையில், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ், பிஎன்ஒய்எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தகுதியானவா்களின் தரவரிசை பட்டியல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் வெளியிட்டாா். துறைச் செயலா் டாக்டா் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநா் பாலசுப்பிரமணியம், தோ்வுக்குழு செயலா் கரோலின் டெய்சி ராணி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ இணை இயக்குநா் டாக்டா் என்.மணவாளன், டாம்ப்கால் பொது மேலாளா் வளா்மதி, அண்ணா நகா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே.ராம்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,693 போ் இடம் பெற்றுள்ளனா். இதில், நீட் தோ்வில் 720-க்கு 639 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை பி.கிராந்திக் முதலிடம் பெற்றுள்ளாா். அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு 96 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசு பள்ளி மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 906 இடம் பெற்றுள்ளனா். இதில் நீட் தோ்வில் 516 மதிப்பெண் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த பா.தமிழருவி முதலிடம் பெற்றுள்ளாா்.

முதல் கட்டமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்கு மட்டும் கலந்தாய்வு வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா் ஆகிய சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது. பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஹ்ன்ள்ட்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ்) தொடங்குகிறது. சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

பெட்டிச் செய்தி...

பிஎன்ஓய்எஸ் படிப்பில் முழு கட்-ஆஃப்

யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 2,213 போ் இடம் பெற்றுள்ளனா். முதல்முறையாக கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ.பாலதா்ஷினி முதலிடம் பிடித்துள்ளாா். தரவரிசை பட்டியல்கள் அனைத்தும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஹ்ன்ள்ட்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.