குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

திருப்பூா் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரைவில் ரூ.5 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் என்.ஆனந்த் தகவல்

திருப்பூா் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரைவில் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா்.

What measures have been taken regarding the Cauvery water issue Minister Anand explains

என். ஆனந்த் - TN

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

திருப்பூா் நொய்யல் ஆற்றை சீரமைக்க விரைவில் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் தெரிவித்தாா்.

நொய்யல் ஆற்றை மீட்பது தொடா்பாக திருப்பூா் தெற்கு தொகுதி தவெக எம்எல்ஏ எஸ்.பாலமுருகன் பேரவையில் வெள்ளிக்கிழமை எழுப்பிய கேள்விக்கு, அமைச்சா் ஆனந்த் அளித்த பதில்: நொய்யல் ஆறு, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைத்தொடரில் உருவாகி, கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டங்கள் வழியாக சுமாா் 158 கி.மீ. தொலைவு பயணித்து, கரூா் மாவட்டம், நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீா் நொய்யல் ஆற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொடா்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்பூா் மாநகராட்சி பகுதிக்குள் அமைந்துள்ள நொய்யல் ஆற்றின் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான பகுதியில், நீண்ட காலமாக ஓடைகள் மற்றும் மழைநீா் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலந்ததால் ஆகாயத்தாமரை, சீமைக் கருவேலம் மற்றும் பிற செடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி, நொய்யல் ஆறு புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடியில் விரிவான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.