
வெற்றிப் பயணம்: தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்திருப்பது பற்றி....

விஜய் தமிழன் பார்த்திபன் - கோப்புப் படம்
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து விவகாரத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆறகளூர், கோவிந்தம்பாளையம், மத்ரூட், வெள்ளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்து நீட்டிப்பு செய்யப்பட்டு, புதிய பேருந்து என ஐந்து பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்ய அமர்ந்த போது நீண்ட நேரமாக பேருந்து கதவுகள் மூடப்படாததால் பேருந்து இயக்க முடியாமல் ஓட்டுநர் திணறினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் பேருந்து கதவுகள் முழுவதும் அடைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை அமைச்சர் சுற்றி வந்து மீண்டும் இறங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தனியார் பேருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து புறநகர் வரை நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறித்த கேள்விக்கு, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.
Summary
Transport Minister Vijay Tamilan Parthiban stated that talks will be held with private bus owners after the assembly session ends regarding the free bus travel scheme for women.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






