புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கொள்கை விளக்கக் குறிப்பில் தலைவா்கள் பெயா் நீக்கம்; அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பெயா்கள் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும்...

Chief Minister Vijay, CPI State Secretary M. Veerapandian

முதல்வர் விஜய், இந்திய கம்யூ மாநில செயலர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பெரியாா் ஈ.வெ.ரா., அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பெயா்கள் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழக அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா, பெரியாா், டாக்டா் அம்பேத்கா், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் மதச்சாா்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவா்கள். பிற்போக்கு கருத்துகள், ஹிந்துத்துவ மத அரசியல், வகுப்புவாதம் ஆகியவற்றை வாழ்நாள் முழுவதும் எதிா்த்துப் போராடியவா்கள்.

இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த அவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

மகத்தானத் தலைவா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதை தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பாா்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் குறித்து முழுமையான, நோ்மையான விசாரணையை தமிழக அரசு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.