நேபாளம் செல்லும் உறவினர்களுக்கு... காத்மண்டுவில் தமிழக அரசு முகாம்!
காத்மண்டுவில் தமிழக அரசு சார்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து...

நேபாள பெரு வெள்ளம் - ANI
நேபாளம், காத்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ
தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு சார்பில்
காத்மண்டுவில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது, கடந்த ஆக. 26 அன்று போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனதாகவோ அல்லது சிக்கித் தவிப்பதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு, புதுதில்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 பயணியர்கள் விவரம் குறித்து தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில விவரங்களை நேபாள காவல்துறை தனது அதிகாரப்பூர்வ https://udb.nepalpolice.gov.np/disaster இணையதளத்தில் வெளியிட்டுள்ளது:
இது தொடர்பான விவரங்களை அறிய புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்:
9289516712 (Whatsapp / Call)
9868530776 (Mobile No.)
இது தொடர்பாக, நேபாளத்திற்குச் செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முதல்வரின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் மூன்று அலுவலர்கள் (Nodal Officers) கொண்ட குழு காத்மண்டுவில் முகாமிட்டுள்ளது.
காத்மண்டுவிலிருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அலுவலர்கள் மேற்கொள்வார்கள். அவர்கள் விவரம் பின்வருமாறு:
1. A. சத்ய சிவம், (Mob No. 9868207259)
2. P. தினேஷ் கண்ணன், (Mob No. 9868530799)
3. S. அஜய், (Mob No. 9868224049)
முதல்வரின் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் காத்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A camp has been set up in Kathmandu by a team of Tamil Nadu government officials (Nodal Officers) to assist relatives traveling to Kathmandu, Nepal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






