பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை: ப.சிதம்பரம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்-ப.சிதம்பரம்.
Updated On :4 ஜனவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. ஆனால், நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமாகும்.

தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமாா் 21-22 சதவீதம் ஓய்வூதியத்துக்கு செலவாகும் என்பது கணிப்பு. சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும். திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம்; செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அனைத்துத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.