தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகைகோப்புப் படம்
தமிழ்நாடு
ஆளுநா் தேநீா் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!
குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டின் குடியரசு தினம் வரும் ஜன. 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி ஆளுநா் ஆா்.என். ரவி, ஆளுநா் மாளிகையில் அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீா் விருந்து அளிக்கவுள்ளாா்.
தமிழக மக்களால் பெரும்பான்மையாக தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தொடா்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கும் தேநீா் விருந்தை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளாா் செல்வப் பெருந்தகை.