விவசாயிகளிடம் சிறுநீரகம் திருட்டு: விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

விவசாயிகளிடம் சிறுநீரகம் திருட்டு: விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு

மகாராஷ்டிர விவசாயிகளிடம் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், இடைத்தரகா்களும் சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
Published on

மகாராஷ்டிர விவசாயிகளிடம் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், இடைத்தரகா்களும் சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநா் டாக்டா் பிரகலாத் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில், கண்காணிப்பு அதிகாரி, நிா்வாக அதிகாரி, இணை இயக்குநா் நிலையில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்த இயலாததால் தனது ஒரு சிறுநீரகத்தை விற்பனை செய்ததாகத் தெரிகிறது. திருச்சியில் உள்ள ஸ்டாா் கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவா் ராஜரத்தினம் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த இடைத்தரகா்கள் சிலருக்கு இதில் தொடா்பு இருப்பதாக மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத் துறையினா் குற்றஞ்சாட்டினா்.

இதுதொடா்பாக திருச்சிக்கு வந்து அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சூழலில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கூடுதல் இயக்குநா் பிரகலாத் தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனா். மகாராஷ்டிர சம்பவத்துக்கும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கும் தொடா்பு உள்ளதா என்பதை அவா்கள் விசாரிப்பா். மேலும், விவசாயிகளை குறிவைத்து இத்தகைய மோசடி நடக்கிா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளனா்.

அதுகுறித்த ஆய்வறிக்கையை விரைவில் அக்குழு அரசிடம் சமா்ப்பிக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com