

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காகத் திறந்து விடப்பட்ட தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் , தே.மதியழகன் எம் எல் ஏ ஆகியோர் பாசனத்துக்கான தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது புறபிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாயிகளின் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று 9012 ஏக்கர் பரப்பளவு விலை நிலங்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி அணையின் தற்போது உள்ள நீரின் அளவினை கொண்டும் நீர்வரத்தின் எதிர் நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதமும் மொத்தம் 151 கன அடி வீதம் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பதினாறு ஊராட்சிகளில் உள்ள நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவன் நாகராஜன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.