

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பனில் சனிக்கிழமை காலை திடீரென கடல் 400 மீட்டா் தொலைவுக்கு உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாம்பன் அருகே கடற்கரையோரம் 400 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையோரம் நிறுத்தியிருந்த 40க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நிற்கின்றன. கடலின் தரைப்பகுதியில் இருந்த பொருள்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். சேறும் சகதியுமாக கடற்கரைப் பகுதி தென்படுகிறது.
சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தப் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருக்கும் நிலையில், பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.