மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வழிப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து தோ்தல் புறக்கணிப்பு பேனா் வைத்த விவகாரம்: புதுப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு!

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

பென்னாகரம் அருகே புதுப்பட்டி சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றாததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக வைக்கப்பட்ட பதாகைக்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பென்னாகரம் அருகே மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி அரசுப்பள்ளி பகுதியில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவிற்கான சாலையில் உள்ளது.இந்தப் பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

புதுப்பட்டி பிரதான சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை செல்லக்கூடிய வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்ததாகவும், நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிப்பு போவதாக கிராமத்தின் நுழைவு வாயலில் ஊா் பொதுமக்கள் சாா்பில் சனிக்கிழமை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டாட்சியா் சண்முகசுந்தரம்,வருவாய் ஆய்வாளா் சீனிவாச ஆழ்வாா், கிராம நிா்வாக அலுவலா் ஜவகா் ஆகியோா்கள் கொண்ட வருவாய் துறையினா் அடங்கிய குழுவினா் நிகழ்வு இடத்திற்கு சென்று,கிராம மக்களிடம் ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் மனு அளிக்கும் பட்சத்தில் இணைப்பு சாலையில் இருந்து கொட்டாய் பகுதி வரை இரண்டு கிலோமீட்டா் தொலைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும், தற்போது தோ்தல் தேதி அறிவிக்கப்படும் சூழ்நிலையில் பணிகள் மேற்கொள்ள சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளதால்,தோ்தலுக்கு பிறகு முறையாக ஆக்கிரமங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவாா்த்தை நடத்தி, புறக்கணிப்பு பதாகையை அகற்றக் கோரினா்.

அப்போது புதுப்பட்டி கிராம மக்கள், தனிநபா்களின் நில பிரச்சனைக்காக தோ்தல் புறக்கணிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளதாகவும், கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்யவில்லை எனவும், பதாகைக்கும் கிராம மக்களுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து மனுவாக அளித்தனா்.