விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

இரண்டாவது நாளாக மீண்டும் நாளை (ஜன. 13) காலை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜராகவுள்ளார்.
ஒரே காரில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விஜய், ஆதவ் அர்ஜுனா
ஒரே காரில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விஜய், ஆதவ் அர்ஜுனாபடம் - எக்ஸ்
Updated on
1 min read

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட முதல் நாள் விசாரணை இன்று (ஜன. 12) நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், இரண்டாவது நாளாக நாளை (ஜன. 13) காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் இருந்து இன்று காலை தில்லி விமான நிலையம் சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா்.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை விஜய் தில்லி புறப்பட்டார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உட்பட 6 பேர் தில்லி சென்றனர் .

விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அங்கு அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், நாளை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளார்.

சிபிஐ விசாரணை முடிந்து இன்று இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இரவு தில்லியிலேயே விஜய் தங்கியிருந்து நாளை சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார்.

ஒரே காரில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விஜய், ஆதவ் அர்ஜுனா
சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்டதுபோல பாஜகவிடம் சிக்கியுள்ளார் விஜய்! செல்வப்பெருந்தகை
Summary

delhi CBI interrogation of TVK Vijay concludes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com