

ஆளுங்கட்சியின் ஆயுதமாக தணிக்கைச் சான்றிதழ் வாரியம் பயன்படுத்தப்பட்டு வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் கனிமொழி எம்.பி. பேசுகையில், "அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். தேர்தலுக்கு தேர்தல், பொங்கல் நினைவுக்கு வருகிறவர்கள் பற்றி பேசிப் பயனில்லை. அவர்கள் யாரென்று மக்களுக்கு மிகத் தெளிவாக அடையாளம் தெரியும். இதையெல்லாம் நம்பி ஏமாறக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை.
தேர்தலுக்கு தேர்தல் தமிழர்களைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் மொழியைப் பற்றி அக்கறைப்படக் கூடியவர்கள், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க நினைப்பவர்கள், தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைத் தராதவர்களுக்கெல்லாம் தேர்தல் வரும்போது, திடீரென்று தமிழர்கள் பற்றிய நினைவு வருகிறது. அவர்கள் யாரென்று தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்களை நம்பி, ஏமாற தமிழ் மக்கள் தயாராக இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முதல்வரும் தமிழக அரசும் எதிர்க்கிறோம் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பராசக்தியே, சென்சார் பிரச்னையில் எவ்வாறு பாடுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். தணிக்கை வாரியத்தை ஓர் ஆயுதமாக மாற்றும்போது, மக்களுக்கு எதிரான ஒன்றாகவும், ஆளுங்கட்சியின் கையில் இருக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அமலாக்கத் துறை, சிபிஐ-யும் அப்படித்தான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.