அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு...
11/03/2025,TN,CHENNAI:  Girls take a cover for the rain drizzles near Spencer plaza on Tuesday. Express/ Ashwin prasath
சென்னை
Updated on
1 min read

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழை அடுத்த இரு நாள்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜன. 16) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜன. 17 - 21 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summary

Daily weather report for Tamil Nadu, Puducherry and Karaikal regions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com