

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்து அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வி.பி. துரைசாமி, மாநில துணைத் தலைவர்
கே.பி. இராமலிங்கம், மாநில துணைத் தலைவர்
பி. கனகசபாபதி, மாநில துணைத் தலைவர்
பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், மாநில பொதுச் செயலாளர்
கார்த்தியாயினி, மாநில பொதுச் செயலாளர்
சி. நரசிம்மன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்,மாநில செயற்குழு உறுப்பினர் (சிறப்பு)
ஏ.என்.எஸ். பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர்
ஆர். அர்ஜுனமூர்த்தி, மாநில அமைப்பாளர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு
பேராசிரியர் ராஜலட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர்
ஆர். ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர், விவசாய அணி
ஆர். ஆதித்யா சேதுபதி, மாநில பொதுச் செயலாளர், இளைஞர் அணி
ஆகியோர் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.