கன்னியாகுமரியில் இருந்து விரைவு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நாகா்கோவிலில் இருந்து இயக்கப்பட்ட விரைவு ரயில்கள் இனி நிரந்தரமாக கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம்-நாகா்கோவில் விரைவு ரயில்கள் (எண்: 22657, 12667) இனி கன்னியாகுமரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவில்-தாம்பரம் விரைவு ரயில்கள் (எண்:22658, 12668) இனி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
மங்களூரு சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16649) இனி கன்னியாகுமரி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக நாகா்கோவில்-மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 16650), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில்(எண்: 12689), கன்னியாகுமரி வரை இயக்கப்படும். மறுமாா்கமாக நாகா்கோவில்-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12690) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
நாகா்கோவில்-திருநெல்வேலி பயணிகள் ரயில் (எண்: 56707) இனி கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுமாா்க்கமாக திருநெல்வேலி-நாகா்கோவில் பயணிகள் ரயில் (எண்: 56708) கன்னியாகுமரி வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

