

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டியில், ஆண்களிலும் பாவப்பட்ட மக்கள் உள்ளனர். அதனால்தான் ஆண்களுக்கும் பேருந்து பயணம் நகரப் பேருந்துகளில் இலவசமாகத் தரும் திட்டம் எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முத்தான 5 திட்டங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் 1,500 ரூபாய் அறிவித்திருந்தார். தற்போது ரூ. 2,000 ஆக தேர்தல் அறிக்கையில் உயிர்த்திருக்கிறார். திமுகதான் காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள். எங்களுக்கு கூட்டணிப் பலம் குறைவாக உள்ளது என்பது தவறு. எடப்பாடியாரும் எம்.ஜி.ஆர் மாதிரி. அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றிப் பெறும்.
தமிழகத்தின் பெரிய கட்சி அதிமுக. கூட்டணிப் பலத்தை மக்கள் பார்க்க மாட்டார்கள். கூட்டணி பலம் அதிமுகவிற்கு குறைவே கிடையாது. தவறாக எடை போடுகிறார்கள். அதிமுகவினருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே பரிசுப் பொருட்களை அளித்து, மக்கள் கொதிப்பை சரி செய்யப் பார்த்திறார்கள்.
திமுக அரசு எந்த சாதனையையும் படைக்கவில்லை. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில்தான் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ப்பதற்கு பாஜக முயற்சி எடுக்கிறது. அதிமுக கூட்டணி பலமானது, குறைபாடு இல்லை. ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்ப்பதை குறித்து பொதுச்செயலாளர் முடிவெடுப்பார். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.