

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல மாவட்டத்தில் உள்ள தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் வழியாக பழனி முருகன் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வருகின்றனர்.
வரும் பிப். 1 ஆம் தேதி பழனி மலைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு, சுவாமி தரிசனத்துக்கு கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கட்டண தரிசன முறை ஜன. 31 மற்றும் பிப். 1, 2 ஆகிய 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.