

விஜய் தொலைக்காட்சியில் தென்றல் தொடர் பாணியில், கனா கண்டேனடி என்ற புதிய தொடர் தொடங்கப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் தென்றல்.
இந்தத் தொடரில் தீபக், ஸ்ருதி ராஜ், சூசன், ஹேமலதா ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் தென்றல் தொடர் பாணியில் கனா கண்டேனடி தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரிக்கிறது.
கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.
சேர்ந்தே இருந்த மூன்று பெண் நண்பர்கள், திருமணத்துக்குப் பின்பும் இணைந்தே இருக்கிறார்களா? சூழல் காரணமாக நட்பினைக் காப்பாற்ற அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மைப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
தென்றல் தொடரில் ஸ்ருதி ராஜ், சூசன், ஹேமலதா நடித்த பாத்திரங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் கனா கண்டேனடி தொடரில் நடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தென்றல் தொடரின் கதைப்போல கனா கண்டேனடி தொடரின் கதையும் இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.