2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..

2025 ஜனவரி மற்றும் 2026 ஜனவரி மாதங்களில் தங்கம், வெள்ளி விலை ஒப்பீடு
2025 - 2026 ஜனவரியில் தங்கம், வெள்ளி விலை இவ்வளவு உயர்வா? போட்டியில் சிக்கனும் முட்டையும்கூட..
Updated on
1 min read

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை 2025 மற்றும் 2026-ன் ஜனவரி மாதங்களின் ஒப்பீடு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருப்பதாக இணையவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் புது வரலாற்றைப் படைத்து வரும்நிலையில், வெள்ளியின் விலையும் அதற்கு ஈடாக போட்டியிட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2025 ஜனவரி முதல் தேதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 79,830-ஆக வர்த்தகமானது. ஆனால், இன்றைய தேதியில் (2026 ஜன. 22) ரூ. 1,42,000-க்கு விற்பனையாகிறது.

அதே வேளையில், 2025 ஜனவரி முதல் தேதியில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 90,500-க்கு என்றிருந்தது. ஆனால், இன்றைய தேதியில் (ஜன. 22) ஒரு கிலோ வெள்ளி ரூ. 3.40 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

ஒருபுறம் தங்கம், வெள்ளி விலை உயர்வடைந்து வரும்நிலையில், தங்களின் சம்பளம் என்னவோ மேலே ஏற முடியாமல் தவிப்பதாக இணையவாசிகள் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே, கோழிக்கறியும் (ஒரு கிலோ சிக்கன் ரூ. 300) முட்டையின் விலையும் போட்டியில் களமிறங்கியிருப்பதாக மற்றொரு புறம் சாமானிய மக்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

Summary

Gold and Silver prices skyrocket since 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com