

தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம் என்று தஞ்சையில் முதல்வர் ஸடாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வைத்தியலிங்கம், நான் எதிர்பார்த்தது, எதிர்பார்த்ததை விட தன்னை அதிகமான அளவிற்கு தன்னை இந்த இயக்கத்திற்கு ஒப்படைத்து, இந்த இயக்கத்திற்கு சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது.
வைத்திலிங்கத்தை பல நேரங்களில் பார்த்ததுண்டு. மறைந்த எம்ஜிஆர் ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றியபோது அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக சுறுசுறுப்பாக எல்லாரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றிய அந்த காட்சியும் நான் பார்த்ததுண்டு.
எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி என்பது உடைந்து அது சின்னாபின்னமாகி இருந்த நிலையில் அப்பொழுது அவர் சட்டப்பேரவையில் அமர்ந்த காட்சியையும் பார்த்தது உண்டு. அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எதையோ பறி கொடுத்தது போல அமர்ந்திருப்பார்.
ஏதோ வேண்டாவிருப்பாக சில கேள்விகளைக் கேட்பார். இதைப் பல நேரங்களில் பார்த்ததுண்டு. ஆக அது என்ன என்பது இப்போது புரிந்துள்ளது. சுயமரியாதையோட நாம் இருக்க முடியவில்லை, சுயமரியாதையோடு பணியாற்ற முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளத்தில் இருந்து உள்ளது.
என்ன அவர் லேட் ஆக வந்துள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்ற உள்ளார். அதுதான் நமக்கான மகிழ்ச்சி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி நெருங்கக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பது யாருக்கும் எள்ளளவு சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் பணியாற்ற உறுதி ஏற்போம், சபதம் எடுப்போம், மீண்டும் திராவிட மாடல் அரசு உதயமாகி ஏற்கெனவே செய்த சாதனைகளை மிஞ்சக் கூடிய அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும். வெல்லும் 200, படைப்போம் வரலாறு, வெல்லுவோம் ஒன்றாக என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.