ஜன. 28-ல் கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் / கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் பணி
தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் / கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் பணிபடம் - DNS
Updated on
1 min read

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி கரூர் வட்டத்திற்கு ஜன. 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய பிப். 7ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரிலுள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று வழிபட முடியாதவர்கள், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமியை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோயிலுக்கான குடமுழுக்கு ஜன. 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், ஜன. 28ஆம் தேதி கரூர் வட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் / கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் பணி
குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை!
Summary

Local holiday for Karur circle on January 28th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com