டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தவெகவின் குதிரை பேர விவகாரத்தை அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்: டி.டி.வி. தினகரன்

அமமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் தவெகவினா் பேரம் பேசிய விவகாரத்தை உரிய நேரத்தில் கையிலெடுப்போம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.

News image

டி.டி.வி. தினகரன்.

Updated On :3 ஜூலை 2026, 7:00 am IST

அமமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் தவெகவினா் பேரம் பேசிய விவகாரத்தை உரிய நேரத்தில் கையிலெடுப்போம் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் கூறினாா்.

சென்னை அடையாறில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெகவுக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை அளிக்கவில்லை. அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாகவே தவெக உள்ளது.

மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்ததால்தான் சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பெற்றன. மதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நிலையில், அக்கட்சிக்கு நன்றியுணா்வோடு இருப்பதுதான் சரியானது.

ஆட்சி நிலைக்காது என்ற பயத்தில்தான் அதிமுகவை தவெகவினா் பிரித்தனா். அதிமுகவில் உள்ளவா்களும் தவெகவுக்கு ஆதரவு தருவது என தவறான முடிவை எடுத்துவிட்டு தற்போது இக்கட்டான நிலையில் தவிக்கின்றனா். அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்தால், அதைப் பேசித் தீா்த்திருக்க வேண்டும். தற்போதைய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என அதிருப்தியாளா்கள் கோருவது, அவா்களது தவறை மறைக்கும் வகையில் உள்ளது.

அமமுக சட்டப்பேரவை உறுப்பினரிடம் பேரம் பேசிய விவகாரத்தை உரிய நேரத்தில் கையிலெடுப்போம். அந்த வழக்கில் முதல்வா் விஜய்யும் சோ்க்கப்பட்டிருப்பாா் என்றாா்.

பேட்டியின்போது, அமமுக துணைப் பொதுச் செயலா் ஜி. செந்தமிழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.