கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 10:11 am IST

கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூலை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாள்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கூடலூரில் இருந்து கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தை இணைக்கும் கீழ்நாடுகாணி மலைப் பாதையில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ராட்சத மரம் விழுந்ததில் சரக்கு லாரி சேதமடைந்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

கூடலூா்-மைசூரு சாலையில் தொரப்பள்ளி பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. அதுவரை சாலையின் இருபுறமும் கடும் குளிரில் வாகன ஓட்டிகள் காத்துக் கிடந்தனர்.

இதனிடையே, கனமழை மற்றும் காற்றுக்கு கூடலூர் அருகே உள்ள கரளிக்கண்டி எனும் இடத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 07) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

A holiday has been declared today (July) for schools in two taluks of the Nilgiris district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.