திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ரூ.,2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரம் விற்பனை செய்கிறது தமிழக அரசு

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 7:43 am IST

தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் சித்திக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2,000 கோடியிலான பங்குகள் வடிவிலான ரூ. 1,000 கோடி மதிப்புள்ள 8 ஆண்டுகால பிணையப் பத்திரமும் மற்றும் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள 15 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் மும்பை ரிசா்வ் வங்கியில் ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் ஜூலை 14-ஆம் தேதி சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.