சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

காருக்குள் விளையாடிய 6 வயது சிறுவன் மூச்சுத் திணறி பலி!

காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக..

News image

மூச்சுத் திணறி பலி

Updated On :13 ஜூலை 2026, 1:44 pm IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் மகன் தமன் (6). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில், நேற்று விடுமுறை என்பதால் சிறுவன் காலை விளையாடச் சென்றுள்ளான். நீண்ட நேரம் ஆகியும் சிறுவனைக் காணாததால் பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. மாலையில் வீட்டில் நிறுத்தி இருந்த காரை திறந்து பார்த்தபோது சிறுவன் காருக்குள் மயங்கிக் கிடந்துள்ளான்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் விளையாடுவதற்காக காருக்குள் சென்றபோது கதவுகள் மூடிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.