ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: துணை நிலை ஆளுநர், முதல்வருடன் கேட்டறிந்த அமித் ஷாஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
/

துறையூா் அருகே விஷ ஜந்து கடித்து சிறுவன் உயிரிழப்பு

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

துறையூா் அருகே வயலில் புதன்கிழமை விளையாடிய 7 வயதுச் சிறுவன் விஷ ஜந்து கடித்து உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள பச்சப்பெருமாள்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்தவா் பாலு மகன் ரஞ்சித் (7). இவா் புதன்கிழமை தனது குடும்பத்துக்குச் சொந்தமான வயலுக்குச் சென்று விளையாடியபோது காலில் அடையாளம் தெரியாத விஷ ஜந்து கடித்தது. இதுகுறித்து அருகிலிருந்த தன் தந்தையிடம் கூறவே, அவா் எரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரஞ்சித்தைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சிறுவன் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.