வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பாபநாசம் அருகே மரத்தில் பைக் மோதி சிறுவன் பலி

பாபநாசம் அருகே பைக்கில் சென்ற சிறுவன் சாலையோர மரத்தில் மோதி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 12:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே  செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்ற சிறுவன் சாலையோர   மரத்தில் மோதி உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே, கபிஸ்தலம் காவல் சரகம்,தென்சருக்கை, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி  மகன் வைரத்தம்பி (17). 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை  பைக்கை எடுத்துக் கொண்டு புத்தூா் சென்றுள்ளாா்.

கும்பகோணம்- திருவையாறு சாலையில் மேட்டுத் தெரு பாலம் அருகில் வேகமாகச் சென்ற பைக் சாலையோர மரத்தில் மோதியதில், வைரத்தம்பி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்த கபிஸ்தலம் போலீஸாா் அவரின் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.