FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க.. புதிய விதிமுறை!

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க புதிய விதிமுறை இணைக்கப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜூலை 2026, 11:25 am IST

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயரை சேர்க்க விரும்பும் இளைஞர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில், இந்திய தேர்தல் ஆணையும் புதிய விதிமுறைகளை சேர்த்திருக்கிறது.

தற்போது, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்போது, அவர்களது பெற்றோரின் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் விவரங்களையும் இணைத்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒருவர் பல முறை விண்ணப்பிப்பது, போலியான பதிவுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தேர்தல் ஆணையத்தின் படிவம் 6-ல், ஒரு புதிய பிரகடனப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் மூலம் இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கும்போது, பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை அல்லது அதில் கேட்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை எண், பகுதி எண் உள்ளிட்டவற்றை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். இதனை முழுமையாக பதிவு செய்யாவிட்டால், படிவம் 6-ஐ சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அதன்படி, எஸ்ஐஆர் திருத்தத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், பெற்றோரின் பெயர்கள் இருந்தால்,

  • பெற்றோரின் பெயர்

  • பெற்றோரின் சட்டப்பேரவை தொகுதி எண்

  • பெற்றோர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி விவரம்

  • வாக்குச்சாவடியின் பகுதி எண்

உள்ளிட்ட விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த படிவத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய விவரங்கள் மூலம், ஒருவர், பல முறை விண்ணபிப்பதும், தவறான முகவரிகளில் விண்ணப்பிப்பதும் தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

எனவே, இளைஞர்கள் இது குறித்து அறிந்துகொண்டு, படிவம் 6-ஐ பூர்த்தி செய்வதற்கு முன்பு தங்களது பெற்றோர்களின் விவரங்களையும் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.