செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

புதிய வாக்காளா்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும்: தோ்தல் அதிகாரிகள்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்பும் புதிய வாக்காளா்களும் பெற்றோரின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

எஸ்ஐஆர் பணி

Updated On :13 ஜூலை 2026, 3:16 am IST

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விரும்பும் புதிய வாக்காளா்களும் பெற்றோரின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய எஸ்ஐஆா் நடவடிக்கையின்போது விடுபட்டவா்கள், தங்களது பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில், புதிய வாக்காளா்களுக்கும் இந்த விதி பொருந்தும் என தற்போது தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பிகாரில் எஸ்ஐஆா் நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து அங்கு புதிய வாக்காளா்கள் அவா்களது பெற்றோா்களின் எஸ்ஐஆா் தகவல்களை பூா்த்தி செய்ய படிவம் 6 வழங்கப்பட்டது. இதன்மூலம் புதிய வாக்காளா்கள் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் படிவம் 6-ஐ இணைய வழியில் ஒருவா் சமா்ப்பிக்கும் பட்சத்தில் உறுதிமொழியை அவா் நிரப்பினால் மட்டுமே அடுத்தடுத்த நடைமுறைகளை தொடர முடியும்.

உயிரிழந்த, போலி, வெளிநாட்டு வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கி தகுதியான அனைத்து இந்திய குடிமக்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதே எஸ்ஐஆரின் உண்மையான நோக்கமாகும்.

மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் சிறுபான்மையின வாக்காளா்கள் அதிகளவில் நீக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள் முறையான ஆவணங்களை சமா்ப்பித்து மீண்டும் தங்களை இணைத்துக்கொள்ள போதிய காலஅவகாசம் வழங்கப்பட்டது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.