தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று வழங்கப்பட்டது குறித்து...

News image

ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து - எக்ஸ்

Updated On :13 ஜூலை 2026, 7:00 pm IST

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று (ஜூலை 13) வழங்கப்பட்டது.

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீட விருதை முன்னாள் அமைச்சர் கரன் சிங், வைரமுத்துவுக்கு வழங்கி கெளரவித்தார்.

60 வது ஞானபீட விருது வழங்கும் விழா தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன், ரூ.11 லட்சம் பரிசு தொகை, பாராட்டு பத்திரம், ஞான தேவதை வெண்கல சிலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்திய எழுத்தாளார்களுக்கு பாரதிய ஞானபீட அமைப்பு சார்பில் 1965 ஆம் ஆண்டு முதல் ஞானபீட விருது வழங்கப்படுகிறது.

இந்திய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, 1975-ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து எழுத்தாளர் அகிலன் பெற்றார். இவர் எழுதிய சித்திரப்பாவை நூலுக்காக வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

தற்போது ஞானபீட விருதைப் பெற்றதன் மூலம், இந்த விருதைப் பெற்ற மூன்றாவது தமிழ் ஆளுமை என்ற பெறுமையை வைரமுத்து பெற்றுள்ளார்.

Summary

Vairamuthu received the Jnanpith Award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.