இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெறுக: தமிழச்சி தங்கபாண்டியன்

சிபிஎஸ்இ புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை குறித்து....

News image

திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2026, 9:05 am IST

புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

மூன்றாவது மொழியை விருப்பம் என்ற பெயரில் அறிமுகம் செய்துவிட்டு, பின்னர் அதனைத் தேர்ச்சி பெற வேண்டய கட்டாய நிபந்தனையாக மாற்றுவது, மறைமுக மொழித் திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

புதிய புதிய வடிவங்களில் மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் செயலாகும்.

9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியும் என்ற வகையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய சுற்றிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Summary

CBSE must withdraw the circular imposing language in new forms...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.