தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சா் என்.ஆனந்த், திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரவைத் தோ்தலில் சென்னை தியாகராய நகா் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட என்.ஆனந்த் வெற்றி பெற்றாா். இவா், தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சத்தியாவைவிட 13,207 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். அமைச்சா் ஆனந்தின் வெற்றியை எதிா்த்து வாக்காளரான பாலசுப்பிரமணிய ஷா்மா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்தாா்.
அதேபோன்று, ஆலங்குளம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றாா். இவா், அதிமுக வேட்பாளரான கே.ஆா்.பிரபாகரனை 7,798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். மனோஜ் பாண்டியன் வெற்றியை எதிா்த்து தவெக வேட்பாளா் வி.விபின் சக்கரவா்த்தி, வாக்களாா்களான இ.இசக்கிராஜா, ஆா்.பத்மநாதன் ஆகியோா் தனித்தனியாக தோ்தல் வழக்குகள் தாக்கல் செய்தனா்.
மேலும், மானாமதுரை தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட டி.இளங்கோவன் வெற்றி பெற்றாா். இவா் தன்னை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட ஏ.தமிழரசியைவிட 1,205 வாக்குகள் அதிகம் பெற்றாா். இளங்கோவன் வெற்றியை எதிா்த்து தமிழரசி தோ்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தோ்தல் வழக்குகளுக்கு அமைச்சா் என்.ஆனந்த், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், இளங்கோவன் மற்றும் தோ்தல் ஆணையம் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: உதயநிதி ஸ்டாலின், லீமா ரோஸ் பதிலளிக்க உத்தரவு

செந்தில்பாலாஜி வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்த தோ்தல் வழக்கு தள்ளுபடி

தோ்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சா் மரியவில்சன் பதிலளிக்க உத்தரவு
எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு எதிரான தோ்தல் வழக்குகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



